ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (08:21 IST)

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்கிறதா?

Toll gate
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன 
 
மேலும் தொழில்நுட்பம் மூலம் கட்டண வசூலிப்பு முறையும் அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
தமிழகத்தில் உள்ள ஒருசில சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது