1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (06:46 IST)

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: தப்புவாரா எடியூரப்பா!

கர்நாடக சட்டசபையில் சமீபத்தில் குமாரசாமி அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை அடுத்த முதல்வராக பொறுப்பேற்றார் பாஜகவின் எடியூரப்பா. இன்று தனது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் எடியூரப்பா கோர உள்ளார். 
 
 
கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நேற்று 14 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே தற்போது கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 210 ஆக உள்ளது. இதில் பாஜக அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 106 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது பாஜகவிடம் 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
 
 
இந்த நிலையில் இன்றைய வாக்கெடுப்பின்போது  அரசுக்கு ஆதரவாகவும், எதிர்ப்ப்பாகவும் சம அளவில் வாக்குகள் பதிவானால், சபாநாயகர் தனது வாக்கை பயன்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழ்நிலையில் சபாநாயகர், பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் ஆட்சியை இழந்த மதசார்பற்ற ஜனதா தளம் பாஜக அரசுக்கு ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தந்தால் ஏற்கத் தயார் என பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்று மீதம் உள்ள ஆண்டுகளுக்கு ஆட்சியை தொடரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்