வீட்டுக்கு ரூ.1000, வண்டி கடைக்கு ரூ.2000 – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

<a class=Ration card" class="imgCont" height="417" src="https://media.webdunia.com/_media/ta/img/article/2019-12/20/full/1576854573-2159.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 10px; padding: 1px; float: left; z-index: 0;" title="" width="740" />
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 24 மார்ச் 2020 (10:52 IST)
கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று மாலை முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வேலை மற்றும் வாழ்வாதரத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3250 கோடி ரூபாய் செலவில் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். கட்டிட தொழிலாளிகள், ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1000 உடன் 17 கிலோ அரிசி, எண்ணெய், பருப்பு முதலிய பொருட்களும் வழங்கப்படும். 100 நாள் வேலைகளில் இருப்போருக்கு இரண்டு நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும். தள்ளு வண்டி கடைகள் வைத்திருப்போருக்கு கூடுதலாக ரூ.1000 சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் தெரு வாரியாக தேதி, நேரம் ஒதுக்கி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிவாரண பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கும் எனவும், கூட்டம் கூட வேண்டாம் எனவும் தமிழக அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :