1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (08:06 IST)

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்! மாணவர்கள் ஆர்வம்..!

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள் என்பதை அடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டாலும் தமிழக மட்டும் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது என்பதும் நீட் தேர்வுக்கான சட்ட போராட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எந்த ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்ய இன்று கடைசி தேதி என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. எனவே இதுவரை நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பக்காமல் இருந்தால் உடனடியாக http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva