ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (10:14 IST)

5000 ஆக குறைந்தது கொரோனா பாதிப்பு.. பொதுமக்கள் நிம்மதி..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 10 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் இன்று 5000 என குறைந்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5874 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று 7171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 1500 பேர் எண்ணிக்கை குறைந்துள்ளது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. 
 
மேலும் நாடு முழுவதும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை 49,015 என்றும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் வலியானவர்களை நினைக்கு 25 என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva