1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

8 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வருகின்றது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,865 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,44,56,401 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 197 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,63,852 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,38,61,756 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,30,793 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கன்னியாகுமரியில் வடியத் தொடங்கும் வெள்ளநீர்… இயல்புநிலை திரும்பல்!