1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (06:59 IST)

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி

கடந்த சில மாதங்களாக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடந்த பரவ ஆரம்பித்ததில் இருந்தே உலகம் முழுவதும் வாகனங்களில் பயன்பாடு குறைந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்தது
இதனை அடுத்து உலகின் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிரடியாக குறைந்தது 
 
ஆனால் இந்தியாவில் மட்டும் வரிகள் உயர்வு காரணமாக பெட்ரோல் டீசலின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தபோதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் வரிகளை உயர்த்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
 
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது என்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து 83.18 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 52 காசுகள் உயர்ந்து 77.29 ரூபாயாக உள்ளது. 
 
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.