வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (18:26 IST)

ராகுல் காந்தி கைதுக்கு அழகிரி, ஸ்டாலின், ப.சிதம்பரம் கண்டனம்!

ராகுல் காந்தி கைதுக்கு அழகிரி, ஸ்டாலின், ப.சிதம்பரம் கண்டனம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்து நாடே கொந்தளித்து உள்ள நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்திற்கு இன்று மதியம் கிளம்பினார். அவர்களுடைய கார் காவல் துறையினரால் தடுக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் திரும்பிப் போகும்படி அறிவுறுத்தப்பட்டனர் 
 
ஆனால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடந்தே பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு செல்ல முயன்ற போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தியை காவல்துறையினர் கீழே தள்ளி விட்டதாகவும் அதனால் அவர் கீழே விழுந்ததாகவும் கூறப்பட்ட செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது 
இந்த நிலையில் ராகுல் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இதுகுறித்து றியதாவது: உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனையளிக்கிறது. ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது - கே.எஸ்.அழகிரி| உ.பி.யில் ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறும்
 
திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியதாவது: தேசிய தலைவர் என்றும் பாராமல் ராகுல்காந்தியை கீழே தள்ளி அவமதிப்பதா? உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்
 
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியதாவது:  வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?; அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முயன்றதில் என்ன தவறு?; நாட்டின் சட்டங்கள் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு பொருந்தாதா?"