தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்
தமிழகத்திற்கு தற்போது கர்நாடகா தண்ணீர் திறக்கும் நிலையில் இல்லை என கர்நாடக துணை முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடக அணைகளில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாகவும், கர்நாடகா அணைகளில் மொத்தமாக 551 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது, இது குடிநீருக்கு மட்டுமே போதுமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 23 நாட்களுக்கு வினாடிக்கு 2600 கனஅடி நீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சட்டபூர்வமான தண்ணீரை பெற தமிழக அரசு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தற்போது விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைந்தாலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva