இனி எந்த படத்துக்கும் சிறப்புக் காட்சிகள் இல்லை..? தியேட்டர் அதிபர்கள் எடுக்கப் போகும் முக்கிய முடிவு!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ரிலீஸீன் போது விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களிடம் இதுவரை இல்லாத அளவுக்கு 80-20 என்ற சதவீதத்தில் பங்கு கேட்டு வாங்கியுள்ளனர். இதனால் லியோ படத்தின் வசூல் நன்றாக இருந்தும் தியேட்டர் அதிபர்களுக்கு லாபம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் விரைவில் ஒரு கூட்டத்தை போட்டு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். அதன்படி “இனிமேல் எந்தவொரு படத்துக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிடுவது இல்லை என்றும், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு டிக்கெட்களை விற்பதில்லை என்றும் முடிவெடுக்க உள்ளதாக” தகவல்கள் வெளியாகியுள்ளன.