1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 நவம்பர் 2024 (13:49 IST)

வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி.. திருப்பதி அறங்காவலர் பேச்சால் பரபரப்பு..!

வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு வக்பு வாரியத்தின் அதிகாரங்களை குறைக்கும் புதிய மசோதாவை கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டுக்குழு பலமுறை கூட்டம் நடத்தியும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் வக்பு வாரியம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஒவைசி, ’திருப்பதி தேவஸ்தானத்தில் முஸ்லிம் உறுப்பினராக இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்குகிறீர்கள்; அப்படி இருக்கும் போது வக்பு வாரியத்தில் மட்டும் ஏன் முஸ்லிம் அல்லாதவர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கேள்வி எழுகிறது," என்று அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்த திருப்பதி அறங்காவலர் பி. ஆர். நாயுடு, "இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது; வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி, அதை திருப்பதியுடன் ஒப்பிட முடியாது. திருப்பதி திருமலை ஒரு இந்து கோவில்; இந்து அல்லாதவர் அங்கு இருக்கக்கூடாது என்பதுதான் கோரிக்கை. இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல; இந்துக்களை தவிர யாரும் இருக்கக் கூடாது என்பது சனாதன தர்மம் கூறும் கருத்து," என்று  கூறினார்.


Edited by Siva