தொடர்புடைய செய்திகள்
- மெய்யழகன் மூலம் 10 சதவீதம் லாபம் வந்தால் போதுமென்று நினைத்தேன்… ஆனால்? – சூர்யா பகிர்ந்த தகவல்!
- திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: எந்தெந்த நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து?
- மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: திடீர் வெள்ளத்தால் கோவிலுக்கு சென்றவர்கள் தவிப்பு..!
- திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!
- திருப்பதியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. திருமலைக்கு வரும் பக்தர்கள் அச்சம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு..!
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் குவிந்ததாகவும், இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கு அதிகமாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்காக நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால், தீபாவளியை கொண்டாடிவிட்டு சுற்றுலா பயணம் செய்ய பொதுமக்கள் முன்வந்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் சுற்றுலா பயணிகள் காணப்படுகின்ற நிலையில், திருப்பதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டில் பக்தர்கள் நிரம்பி வழிந்துள்ள நிலையில், நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும் 4 மணி நேரம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் 67,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர், மற்றும் அதே நாளில் உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடியே 38 லட்ச ரூபாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
