கொடியேற்றதுடன் துவங்கிய பிரம்மோற்சவ விழா...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரிய சேஷ வாகன வீதி உலாவும் நடக்கிறது.
இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 25 ஆம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பல்லக்கு வாகனம், 26 ஆம் தேதி காலை கற்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.
மேலும், 27 ஆம் தேதி காலை மோகினி அவதாரமும், இரவு கருட சேவையும் நடைபெறுகிறது. 28 ஆம் தேதி காலை ஹனுமன் வாகனம், மாலை தங்க தேரோட்டம், இரவு கஜ வாகனம், 29 ஆம் தேதி காலை சூர்ய பிரபை, இரவு சந்திர பிரபை, 30 ஆம் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெறுகிறது.
நிறைவு நாளான அக்டோபர் 1 ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும்.