1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2017 (19:30 IST)

இந்தியா- இலங்கை முதல் டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்!!

இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.


 
 
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை (26/07/2017) தொடங்குகிறது. 
 
இந்திய அணி கடைசியாக 2015 ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி கைப்பற்றியது. 
 
இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 
 
அணி வீரர்கள் விவரம்:
 
இந்தியா: 
 
விராட் கோலி (கேப்டன்), தவான், அபினவ் முகுந்த், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், விருத்திமான் சகா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ராகுல்.
 
இலங்கை: 
 
ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, கருணா ரத்னே, குஷால் மெண்டீஸ், மேத்யூஸ், ஆஸ்லே குணரத்னே, டாக்வெலா, தனஞ்ஜெயா, டிசில்வா, தனுஷ்கா குணரத்னே, தில்ருவன், பெரைரா, சுரங்கா லக்மல், லகிருகுமாரா, புஷ்பக்குமாரா, நுவன் பிரதீப்.