அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா செளந்தர்யா ரஜினிகாந்த்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'விஐபி 2' படத்தின் புரமோஷன் பணிகளில் செளந்தர்யா பிசியாக உள்ளார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் 'எந்த நடிகரை இயக்க ஆவலுடன் உள்ளீர்கள்' என்ற கேள்விக்கு பதிலளித்த செளந்தர்யா 'அஜித்' என்று கூறியுள்ளார். அஜித்துக்காக ஒரு மாஸ் கதை வைத்துள்ளதாகவும் நேரம் வரும்போது அவரிடம் அந்த கதையை கூறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அஜித் நேற்று திருப்பதி சென்றபோது இதுகுறித்து ஒரு ரசிகர் அஜித்திடம் கேட்டபோது அவர் பதிலுக்கு புன்னகையை மட்டும் உதித்தாராம். எனவே விரைவில் அஜித்-செளந்தர்யா சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.