ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (08:02 IST)

திருப்பதி மலைப்பாதையில் சிக்கிய 6வது சிறுத்தை.. பக்தர்கள் அதிர்ச்சி..!

திருப்பதி மலை பாதையில் ஏற்கனவே 5 சிங்கங்கள் சிக்கியுள்ள நிலையில் இன்று அதிகாலை இன்னொரு சிங்கம் சிக்கி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
திருப்பதி மலை பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் சிறுமி ஒருவரை சிறுத்தை தூக்கி சென்று கொன்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இதனை அடுத்து திருப்பதி மலை பாதையில் நடமாடும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். இந்த கூண்டில் 5 சிறுத்தைகள் சிக்கிய நிலையில் இன்று மேலும் ஒரு சிறுத்தை சிக்கி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்னும் எத்தனை சிறுத்தைகள் அங்கு பதுங்கி இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து அந்த சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva