மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுக! டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பால் குழப்பம்

Last Modified செவ்வாய், 19 மார்ச் 2019 (06:40 IST)
நேற்று வெளியான டைம்ஸ் நெள ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்றும், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 135 தொகுதிகளிலும் பிற கூட்டணி 125 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் 34 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றும் டைம்ஸ் நெள கணித்துள்ளது. எனவே மீண்டும் 2014ஆம் ஆண்டு போலவே தமிழகத்திற்கு அமைச்சர் பதவியில் முக்கியத்துவம் கிடைக்காமல் போகும் ஆபத்து உள்ளதாகவே கருதப்படுகிறது

இருப்பினும் தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவிகளுக்காக திமுக இணைய வாய்ப்பு இருப்பதாகவும், இதனையடுத்து காங்கிரஸ், விசிக கட்சிகள் தேர்தலுக்கு பின் திமுகவின் தோழமை கட்சிகள் என்ற நிலையில் இருந்து விலகும் என்றும் மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக எம்பிக்களை தனது ஆதரவாளராக மாற்றிய மோடி, திமுக எம்பிக்களையும் வளைத்து போட தயங்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. மொத்தத்தில் தேர்தலுக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு குழப்பம் ஏற்படுவது உறுதி என்றே கூறப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :