திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (10:42 IST)

குஜராத் கலவரம் பற்றிய பாடங்கள் நீக்கம்! – சிபிஎஸ்சி எடுத்த முடிவு!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதை தொடர்ந்த முஸ்லிம் படுகொலைகளும் இந்திய வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பின் அரசியல் அறிவியல் பாடத்தில் ஒரு பகுதி இருந்தது.

இந்த இஸ்லாமிய படுகொலை குறித்து அப்போது வாஜ்பாய் கூறிய வாக்கியங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அந்த பகுதியை நீக்கியுள்ளது என்.சி.இ.ஆர்.டி. இதுகுறித்து கல்வியாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.