பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மனைவிவின் கார் திருட்டு.. டெல்லி காவல்துறையில் புகார்..!
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் மனைவிக்கு சொந்தமான கார் திருடு போனதை அடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சிகளின் தேசிய தலைவர் நட்டாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ற கார் கடந்த 19ஆம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ்காக விடப்பட்டிருந்தது
இந்த நிலையில் கார் சர்வீஸ் முடிந்து விட்டதா என்று கேட்கவும் தனது காரை எடுக்கவும் நட்டாவின் மனைவி ஜோவிந்தர், கார் சர்வீஸ் செண்டருக்கு வந்தபோதுதான் கார் சர்வீஸ் சென்டரில் இருந்து அவரது கார் திருடு போனது தெரியவந்துள்ளது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தெற்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காரை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்
Edited by Siva