செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (18:33 IST)

கட்சி தாவிய கவுன்சிலர்கள் – கடுப்பில் மம்தா பானர்ஜி

மக்களவை தேர்தல் முடிந்தாலும் முடிந்தது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுக்கு அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட வங்க தேசத்தை தனது அரசியல் திறமையால் திரிணாமூல் காங்கிரஸின் கோட்டையாக மாற்றினார் மம்தா. ஆனால் அந்த கோட்டைக்குள் பாஜக புகுந்துவிட்டதை அவர் கவனிக்க தவறிவிட்டார். போன சட்டசபை தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே வெற்றிபெறும் அளவில் இருந்த பாஜக இந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களை பிடித்திருப்பதே மம்தாவுக்கு பெரிய அடி.

இந்நிலையில் தற்போது திரிணாமூல் காங்கிரஸிலிருந்து 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களான 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இதோடு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் அடக்கம். ஆக வங்க தேசமும் பாஜகவின் கோட்டையாக மாறி வருகிறதோ என்ற அச்சம் மற்ற திரிணாமூல் காங்கிரஸாரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுபற்றி பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா “7 கட்டமாக மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தது போல 7 கட்டமாக அனைத்து கட்சியினரும் பாஜகவோடு வந்து இணைவார்கள்” என்று கூறியுள்ளார்.