திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2018 (12:13 IST)

மலைப்பாம்பை ரயிலில் விட்டுச் சென்ற வாலிபர்

கோட்டையம் ரயிலில் சட்டவிரோதமாக மலைப்பாம்பை பிடித்து பையில் எடுத்து வந்த வாலிபர், போலீஸாருக்கு பயந்து அததை ரயிலில் விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ஜியோ ஜான். இவர் காரைக்காலில் இருந்து கேரளாவுக்கு, மலைப்பாம்பை ஒரு பையில் எடுத்துக்கொண்டு ரயிலில் சென்றார். போலீசார் சோதனையில் ஈடுபடுவது தெரிந்து அவர் பையை ரயிலில் போட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளார்
 
சிறிது நேரத்திற்கு பின்னர், ரயிலில் இருந்த பை நகர்வதைக் கண்ட பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கேரள போலீசார் வந்து பையை திறந்து பார்த்த போது, மலைப்பாம்பு உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மலைப்பாம்பை கூண்டுக்குள் அடைத்தனர்.

தொடர்ந்து பையை சோதனை செய்து பார்த்தில், ஜியோ ஜானின் அடையாள அட்டை இருந்துள்ளளது. அதை வைத்து ஜியோவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.