மார்ச் 17 முதல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து நாக்பூர் உள்பட ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் மார்ச் 17ஆம் தேதி முதல் பகல் ஒரு மணிவரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்றும் நகராட்சி கமிஷனர் அறிவிப்பு செய்து உள்ளார்
இதனை அடுத்து மளிகை பொருட்கள் பழங்கள் காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய பொருள்களின் கடைகள் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் அதற்குள் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாக்பூர் நகரில் மட்டும் இன்று 2587 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் ஆயிரத்து 95 பேர் குணமாகி உள்ளனர் என்பதும் 18 பேர் பலியாகி உள்ளனர் என்றும் மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது