செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (20:51 IST)

மும்பையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6923 பேருக்கு கொரோனா

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகமாக கொரோனாபாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து அங்கு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று மும்பையில் மட்டும் 6923 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மும்பையில் 8 பேர் உயிரிழந்தனர் என்றும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,649 ஆக உயர்ந்துள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
மேலும் மும்பையில் மொத்தம் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மகாராஷ்டிரா மாநிலத்தின் மற்றொரு முக்கிய நகரமான நாக்பூரில் இன்று மட்டும் 3970 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,479  பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் 58 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன