வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:23 IST)

அடிபம்பில் குடம்குடமாக கொட்டும் மதுபானம்! போலீஸார் அதிர்ச்சி

alcohol
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஜான்சி மாவட்டத்தில் பூமிக்கு அடியில் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து மதுவை ஒரு கும்பல் சேமித்து வைத்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு  மாநிலங்களில் அரசே மதுபானம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது உள்ளிட்ட செயல்கள் நடந்துவருவதாக நாளிதழ்களில் தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் பூமிக்கு அடியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து மதுவை சேமித்து வைத்த கும்பல் ஒன்று அடி பம்பு உருவாக்கி  தேவையானபோது அதை வெளியே எடுத்து வந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்றனர். அங்கு பல லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.