1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (18:47 IST)

கள்ளக் காதலிக்கு வீடியோ கால் செய்து தந்தையின் மண்டையை உடைத்த மகன்!

andra
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில், ஒரு நபர் தன் தந்தையைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆந்திர மா நிலம் சித்தூர் பகுதியில் வசிப்பவர் டெல்லி பாபு. இவர்,அங்குள்ள பகுதியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்

இவரது மகன் பாரத்(21). அங்கு சுமை தூக்கும் தொழிலாளியாகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண்ணுடம் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பாரத் வேலைக்குச் செல்லாமல், கள்ளக் காதலியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டுபிடித்த அவரது தந்தை பாபு, பாரத்தை கண்டித்துள்ளார்.  ஆனால், பாரத் இத்தொடர்பை விட மறுத்துள்ளார்.

இதுபற்றி பாபு போலீஸில் புகார் அளித்த  நிலையில், போலீஸார், பாரத்திற்கு அறிவுரை கூறி அனுப்பினர்.

வீட்டிற்கு வந்த பாரத், தன் கள்ளக் காதலிக்கு வீடியோ கால் செய்து, தன் தந்தையை அடித்து, உதைத்து, கட்டையை எடுத்து, தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில், ரத்த வெள்ளத்தில் இருந்த பாபுவை அருகிலுள்ளோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாரத்தை கைது செய்து,  விசாரித்து வருகின்றனர்.