1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (21:38 IST)

உன்கூட வாழும் யானைக்குட்டி நான் - மனைவியை கவிதையால் வர்ணித்த ரவீந்தர்!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சீரியல் நடிகை மகாலட்சுமியை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். 
 
அதிலும் ரவீந்தர் உருவ கேலியால் தாக்கப்பட்டார். ஆனால், அவர்களோ அது எதையும் பெரிதாக பொருட்படுத்தாமல் ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில் மனைவி மகாலக்ஷ்மியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ..ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான்"என கூறி கவிதையால் வர்ணித்திருப்பதை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.