1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (12:59 IST)

ஓட்டு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு செருப்பு மாலை(வீடியோ இணைப்பு)

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சேகரிக்க வந்த பா.ஜ. வேட்பாளருக்கு முதியர் ஒருவர் செருப்பு மாலையை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு கட்சியை சார்ந்த நபர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தஹர் மாவட்டம் தாமோத் பகுதியில் பா.ஜ. வேட்பாளராக போட்டியிடும் தினேஷ் ஷர்மா என்பவர் கடந்த ஞாயிறன்று தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்தார்.

அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் செருப்பு மாலையை எடுத்து  தினேஷ் ஷர்மாவின் கழுத்தில் போட முயன்றார்.  தினேஷ் ஷர்மா செருப்பு மாலையை வாங்கி தானே கழுத்தில் போட்டுக்கொண்டார். பின்னர் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் தனது வார்டில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டதால், ஆத்திரத்தில் ஓட்டு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்டு புத்தி புகட்டியதாக கூறியுள்ளார்.
 
அந்த முதியவர் வேட்பாளரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.