1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (15:30 IST)

சாட்டிங் செய்ததால் வந்த விபரீதம்..புதுப்பெண்ணுக்கு வந்த சோதனை...

செகந்திராபாத்தில் வசித்து வருபவரான சிவகுமார் என்பவர் ஒரு நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு  சிறுவயது முதலே வெண்ணிலா என்ற பெண் தோழி இருந்துள்ளார். 
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமாருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. ஆனால் சிவகுமார் தன் தோழியான வெண்ணிலாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியும், சாட்டிங் செய்தும் வந்துள்ளார். இது தெரிந்து அவரது மனைவி சிவகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்குமிடையே வாக்குவதம் முற்றிய நிலையில்  சண்டையும் வலுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
இதனால் மன உளைச்சகுக்கு உள்ளான சிவகுமார் கடந்த  வாரம் சனிக்கிழமை அன்று வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனை அறிந்து கொண்ட வெண்ணிலா, சிவகுமார் இறந்த மன வேதனையில் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். எனவே அவரது தோழி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துவிட்டார்  என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.