1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சமையலை தவிர சரும பராமரிப்பிலும் உதவும் கடுகு எண்ணெய் !!

சமையலை தவிர கடுகு எண்ணெய்யானது காய்கறி சாலட்களிலும், குழந்தைகளின் மசாஜ் செய்யவும், தலையில் தடவும், முகம் மற்றும் உடலில் தடவவும் எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கடுகு எண்ணெய்யையும், தேங்காய் எண்ணெய்யையும் சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகத்தில் தடவி விட்டு, நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்புடனும் இருக்கும்.
 
கடுகு எண்ணெய் சருமத்துக்கு இயற்கையான சன் ஸ்கிரீனாகப் பயன்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதோடு, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும்  நீக்கும்.
 
தினமும் காலையில் குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்பும், இரவில் தூங்குவதற்கு முன்பும் உதட்டில் கடுகு எண்ணெய்யை தடவி வந்தால், உதடுகளின் கருமை நிறம் மாறுவதோடு, மென்மையாகவும் மாறிவிடும்.
 
கடுகு எண்ணெய்யை சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்து வர, தலைமுடி நீண்டு அடர்த்தியாக வளரும். தலைமுடிக்கும்  சருமத்துக்கும் மட்டுமல்லாமல் பற்களையும் பளிச்சென சுத்தமாக வைத்திருக்கவும் கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். 
 
பல் துலக்குவதற்கு முன்பு, கொஞ்சம் கடுகு எண்ணெய்யை வாயில் ஊற்றி, சிறது நேரம் வைத்திருந்து கொப்பளித்தால், பற்களில் உண்டாகும் நோய் தொற்று,  ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் கசிதல் போன்றவை சரியாகும்.