திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (14:47 IST)

லடாக் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் செய்த நபர்!

மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் ஓம்கார் (வயது28). புகைப்பட கலைஞரான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலம் லடாக்கில் இருந்து கன்னியாகுமரி நோக்கி பாத யாத்திரை புறப்பட்டார். 
 
சுமார் 200 நாட்களாக தொடர்ந்து பாத யாத்திரை மேற்கொண்டு நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார். இவர் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நடந்தே சென்று அறிந்து ஆராய்ச்சி கட்டுரையாக புத்தக வடிவில் வெளியிடும் நோக்கில் இந்த பயணம் மேற்கொண்டதாக கூறினார்.