தெருக்களில் குப்பை போல குவிந்து கிடக்கும் பிணங்கள்: கொரோனாவின் கோரம்!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தெருக்கள் மற்றும் வீடுகளில் சடலங்கள் அங்காங்கே காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 48 லட்சத்தை கடந்துள்ளது. நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.14 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 86 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
ஆனால், தற்போது வரை பல நாடுகளில் குறைவான அளவிலான பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை போய்ச் சேராததால் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உருவாகியுள்ளது. அங்கு கடந்த 5 நாட்களில் தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்து 400-க்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மரணித்தவர்களில் 85% பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்க கூடும் என தெரிகிறது.