வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (19:00 IST)

கொரோனா கோர தாண்டவம்: ஆந்திராவில் 24 மணி நேர பாதிப்பு நிலவரம்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரண்டாயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது 
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 1,506 பேர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,835 இன்று குணமாகி உள்ளதாகவும் கொரோனாவால் இன்று 16 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதுவரை ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,93,697 என்றும் இதுவரை குணமானவர்கள் எண்ணிக்கை 19,62,185 என்றும் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 13,647 என்றும் ஆந்திர மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் தற்போது ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 17,865 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது