வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (15:15 IST)

பெண் அமைச்சரின் இடுப்பில் கை வைத்த அமைச்சரால் பரபரப்பு...

திரிபுரா தலைநகரான அகர்தலாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில், கர்ஜி - பிலோனியா ஆகிய இடங்களுக்கான ரெயில் தடப் போக்குவரத்தை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது இதற்கான கல்வெட்டை திறந்து வைத்த போது திரிபுரா ஆளுநர் கப்தான் சிங் சோலாங்கி முதலமைச்சர் பிப்லப் தேவ் ஆகியோர் உடனிருந்தனர்.
 
மோடி அமர்ந்திருந்த அதே வரிசையில் திரிபுரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் சமூக நலத்துறைக்கு பொறுப்பேற்கும் பெண் அமைச்சரும், பழங்குடி இளம் தலைவருமான சாந்தனா சக்மா உள்ளிட்டோர் நின்றிருந்த சயமத்தில் மனோஜ்  காந்தி தேவ், பெண் அமைச்சர் இடிப்பில் கை வைத்தார். இது சம்பந்தமாக புகார் எழுந்தது.
 
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. இந்நிலையில் மனோஜ் காந்தி தேவ் - ஐ திரிபுரா அமைசரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்ச்கட்சியில் உள்ள இடது சாரிகள் போக்கொடி உயர்ந்திவ்ருகின்றனர்.
 
ஆனால் இதுசம்பந்தமாக பெண் அமைச்சர் இதுவரை எந்த புகாரும் தரவில்லை.  இந்நிலையில் இடது சாரிகள் இவ்விஷயத்தை மின்னல் வேகத்தில் பரப்பி வருகின்றனர்.
 
அதேசமயம் மனோஜ் காந்தி இது குறித்து இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.