வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (16:16 IST)

4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம் ...

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். குடியேற்றத்தை மட்டும் சார்ந்திராமல் ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க இது ஒரு வழி என்று பிரதமர் விக்டர் ஆர்பன் கூறினார்.
 
அந்நாட்டில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்க்கின்றனர்.
 
ஹங்கேரியின் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு வீழ்ச்சி ஏற்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சாராசரியைவிட ஹங்கேரியில் குறைவாகும்.
 
நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தபிறகு இது ரத்து செய்யப்படும். ஐரோப்பாவில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதங்களுக்கு காரணம் குடியேற்றம்தான் என்று பிரதமர் ஆர்பன் கூறினார்.
 
"ஹங்கேரிய மக்கள் வித்தியாசமாக நினைக்கிறார்கள்," என்று தெரிவித்த அவர், "எங்களுக்கு மக்கள்தொகை என்பது எண்களாக தேவையில்லை. எங்களுக்கு ஹங்கேரிய குழந்தைகள்தான் தேவை" என்றார்.