வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (19:53 IST)

காரை ஹெலிகாப்டர் போல் வடிவமைத்த நபர்...பறிமுதல் செய்த போலீஸார்

HELICOPTER CAR
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு அம்பேத்கார் நகர் மாவட்டத்தில் உள்ள கஜோரி பஹார் பகுதியில் வசிப்பவர்  ஈஸ்வர் தீன். இவர்கள் தன்னிடம் இருக்கும் கார் ஒன்றை சில லட்சங்கள் செலவு செய்து, ஹெலிகாப்டர் போல் வடிவமைத்துள்ளார்.
 
அங்கு நடைபெறும் திருமண விழாக்களுக்கு காரை வாடகைக்கு விடும் முயற்சியில் இப்படி வடிவமைத்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஈஸ்வரன் தீன் தனது காருக்கு பெயிண்ட் அடிக்க வேண்டி, அதைச் சாலையில் ஓட்டிச் சென்றார்.
 
சாலையில் நின்றிருந்த போக்குவரத்து போலீஸார், ஹெலிகாப்டர் மாடல் காரை தடுத்து நிறுத்தி, விதிகளை மீறி மாற்றங்களை செய்ததாகக் கூறி ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
 
அதன்பின்னர் அவர் அபராதம் செலுத்திய பின் அக்காரை விடுவித்தனர்.
 
மேலும், காரின் வடிவமைப்பை மாற்ற ஆர்.டி.ஓவிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.