1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (20:17 IST)

இளைஞரை கடித்து கொன்ற சிங்கம்..! செல்பி எடுக்க சென்றபோது விபரீதம்.!!

Lion
திருப்பதியில் செல்பி எடுக்க சென்ற இளைஞர் ஒருவரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி  குதித்து உள்ளே சென்றுள்ளார். 
 
அங்கிருந்த சிங்கத்துடன் செல்பி எடுப்பதற்காக, அதன் அருகே அந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிங்கம் ஒன்று, அவர் மீது பாய்ந்து கடித்துக் உதறியது. 
 
அந்த இளைஞர் கூச்சலிட்டதால் அங்கிருந்த பணியாளர்கள், அவரை ஓடி வருமாறு அழைத்தனர். அதற்குள் அந்த சிங்கம் அந்த இளைஞரின் கழுத்தைப் பிடித்து கடித்துக் கொடூரமாக கொன்றது.

 
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த இளைஞரின் சட்டத்தை மீட்டு, உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். செல்பி எடுக்க சென்ற இளைஞர் ஒருவர், சிங்கம் கடித்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.