ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (12:50 IST)

மனைவியை பழிவாங்க ஆபாச வீடியோ எடுத்த கணவன்! ஷேர் செய்த நண்பன்! - மும்பையில் அதிர்ச்சி!

mobile

மும்பையில் மனைவியோடு உல்லாசமாக இருந்ததை எடுத்து தனது நண்பனுக்கு கணவனே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையில் ஒரு பெண் அவரது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், சமீபமாக அந்த கணவர் அதிகமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை மூண்ட நிலையில் மனைவி அந்த கணவரை அவமானப்படுத்தி பேசியதாக தெரிகிறது.

இதனால் மனைவியை பழிவாங்க நினைத்த அந்த நபர் தனது மனைவியுடன் உல்லாசமாக இருக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை தனது நண்பனான ஜோஷ்வா ப்ரான்சிஸ் என்பவருக்கு அனுப்பியுள்ளார். அதை வைத்து பணம் பறிக்க திட்டமிட்ட ஜோஷ்வா அந்த வீடியோவை ஆபாச வலைதளம் ஒன்றில் பதிவேற்றியுள்ளார்.
 

பின்னர் அதன் லிங்கை தனது நண்பனின் மனைவிக்கு அனுப்பிய அவர், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அந்த வீடியோக்களை நீக்கி விடுவதாகவும், இல்லையென்றால் அதை மேலும் பலருக்கு ஷேர் செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் ஜோஷ்வா கேட்ட பணத்தை அந்த பெண் கொடுத்துள்ளார். ஆனால் அந்த வீடியோ சில நாட்களுக்கு பின்னர் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் ஜோஷ்வாவை கைது செய்து விசாரித்த போதுதான், அந்த வீடியோக்களை அனுப்பியதே அந்த பெண்ணின் கணவர்தான் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மனைவியை பழிவாங்க கணவனே ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K