திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (12:20 IST)

உபியில் முதல்வர் - துணை முதல்வர் மோதலா? மோடி, நட்டாவிடம் மாறி மாறி புகார்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து இருவரும் மாறி மாறி மோடி, அமித்ஷா, நட்டாவிடம் புகார் அளித்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாததை அடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் செயல்படும் விதம் சரியில்லை என்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் புகார் அளித்து வருவதாகவும் அரசை விட கட்சி தான் முக்கியம் என்றும் யோகி ஆதித்யநாத் மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்தது தான் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் துணை முதல்வர் கேசவ் பிரசாத், மோடி அமித்ஷா நட்டா ஆகியவர்களை சந்தித்து யோகி ஆதித்யநாத் குறித்து புகார் கூறியதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத்  ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவில் உள்ள சில தலைவர்களும் குரல் எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran