புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (16:27 IST)

திருட்டை பங்கிடுவதில் தகராறு ... நாயின் வாயை வெட்டிய போதை ஆசாமிகள்...பகீர் சம்பவம்

சென்னை போரூரில் வசித்துவந்த ஒரு 17 வயது சிறுவன் , தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டுக்கு வந்த மூன்றுபேர் சிறுவனை எங்கே என கேட்டு  அவரது பாட்டியை மிரட்டியுள்ளனர்.
அப்போது, வீட்டில் வளர்த்துவந்த நாய் புதிதாக இருந்த மூன்றுபேரை பார்த்து, குரைத்துள்ளது. அதனால் கோபம் அடைந்த  அவர்கள், போதையில் இருந்ததால்  நாயின் வாயை வெட்டினர். அது ரத்தவெள்ளத்தில்  அங்குமிங்கும் வலியால் அலறி ஓடிக் கத்தத்தொடங்கியது.
 
பின்னர் வயதான பாட்டியிடம் எங்கே அவன் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். தனக்கு தெரியாது என  அவர் கூறியுள்ளனர்.  அக்கம் பக்கத்து வீட்டர் நாயின் சத்தத்தை கேட்டு வந்தபோது மூன்றுபேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்து மூன்றுபேரையும் விசாரித்தபோது, அவர்கள் மூன்று பேரும் அருண், வெங்கட், முத்து என்பது தெரியவந்தது. இவர்கள் அந்த சிறுவனுமான நான்கு பேர் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாகவும், அதைப் பங்குபோடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளதால், சிறுவனை அடிக்க வீட்டுக்குவந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களைக் கைது செய்த போலீசார் மேலும் அவர்களிடம் விசாரித்துவருகின்றனர்.