1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (19:39 IST)

பாட்டி இறந்த துக்கம்- விமானத்தை இயக்க மறுத்த விமானி!

indigo
இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் விமானம் இன்டிகோ விமானம். இந்த நிறுவனத்தைச் சேந்த விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் தன் பாட்டி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கிள்ளார் விமானி.
 

பாட்னாவில் இருந்து புனேவுக்கு செல்லும் இன்டிகோ விமானத்தை இயக்கிய விமானி ஒருவர், தன் பாட்டி இறந்த துக்க செய்தியை தாங்க முடியாமல், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால், இன்று மதியம் 1.25 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், வேறு விமானியின் மூலம் 4.41 மணிக்கு இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.