1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜனவரி 2025 (12:26 IST)

பெரியார் சொன்னார்னு கர்ப்பப்பையை ஏன் அறுத்துக்கல..? - சீமான் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

seeman

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் வீட்டை மே 17 இயக்கத்தினர் உள்ளிட்ட பலர் முற்றுகையிட்டுள்ள நிலையில், சீமான் மீண்டும் பெரியாரை தாக்கி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இன்று சீமான் வீட்டிற்கு முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய அமைப்பு போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சீமான் “பெரியாரா? பிரபாகரனா? என்று மோதுவதாகி விட்டது இனி மோதி பார்க்க வேண்டியதுதான். அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசியவர் அவர். என் மொழியை தாழ்த்தி பேச நீங்கள் யார்? அடிப்படையில் என் மொழி காட்டுமிராண்டி மொழி என்றால், உங்களை தமிழர் தலைவர் என்று சொல்லி புத்தகம் வெளியிடுகிறார்களே? நீங்கள் உங்களை முட்டாள்களின் தலைவன் என்றுதானே சொல்ல வேண்டும்”

 

“தாலி பெண்களை அடிமைப்படுத்துகிறது. தாலி அடிமையின் சின்னம், அதை அறுத்து எறியுங்கள் என்றார் பெரியார். அதை ஏற்று பொது மேடையில் வைத்து திராவிட கழகம் தாலியை அறுத்து எறிகிறது. ’நீ பிள்ளை பெற்றெடுக்கும் எந்திரம் அல்ல. கர்ப்பப்பையை வெட்டி எறி’ என்றும் பெரியார் சொன்னாரே. ஆனால் நீங்கள் ஏன் பொது மேடையில் வைத்து ஒரு இடத்திலும் கர்ப்பப்பையை அறுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஏற்கனவே சீமானின் பெரியார் குறித்த பேச்சுகள் சர்ச்சையை உருவாக்கி போராட்டம் அளவு வளர்ந்துள்ள நிலையில் மீண்டும் சீமான் இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K