புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (23:56 IST)

திருமணம் செய்தவுடன் தம்பதி செய்த முதல் வேலை....,

கர்நாடகாவில் இன்று திருமணம் முடிந்த கையோடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்தனர் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தேர்தலில் ஓட்டுபோடுவது ஒவ்வொரு மக்களின் ஜனநாயக கடமை என்ற விழிப்புணர்வை ஒவ்வொரும் அறிவர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் நகரில் உள்ள பீஜ்கர்ணி கிராமத்தில் வசிப்பவர் சுமித் அஷ்தேகர். இவருக்கு இன்று திருமணம் ஆனது.  இதையடுத்து, இவர் தனது மனைவியுடம் சென்று நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்தார்.

கடந்த ஆண்டு மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி மறைவை தொடர்ந்து கர்நாடகாவின் பெல்காம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  தற்போது பாஜக சார்பில் சுரேஷ் அங்காடியில் மனைவி மங்கல சுரெஷ் அங்காகடி போட்டியிட்டுள்ளார்.