ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (20:55 IST)

தென்னிந்தியாவின் கொரோனா நகரமாக மாறிய பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 10,000+

கர்நாடகாவில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு10,000ஐ இன்று கடந்தது. இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் 10,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவில் அதிக வைரஸ் பாதிப்பு கொண்ட நகரமாக பெங்களூரு மாறியது 
 
இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,65,290என்றும் இதுவரை குணமாகி டிஸ்சார்ஜ் செய்தவர்களின் எண்ணிக்கை 9,83,157 என்றும் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 69,225 என்றும் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,889 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமாகி 2638 பேர் டிஸ்சார்ஜ் அந்ய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 40 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது