புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (19:10 IST)

கேலி பேசிய இளைஞரை அடித்துக் கொன்ற நபர்...

தனது மகளை பற்றி தவறாக பேசியதால் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த டெல்லிக்காரரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.
தென்கிழக்கு டெல்லி, பால்பரிதால்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. அவரது அண்டை வீட்டுக்காரரின் பெயர் ராகேஷ்.இருவரும் நன்கு நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
 
இந்நிலையில் இருவருக்கும் இடையே நேற்று திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ராகேஷ் கிருஷ்ணாவின் மூன்று வயது மகளின் பிறப்பு பற்றி தவறாக ஏதோ சொல்ல,இருவருக்கும் இடையே கைக்கலப்பு தீவிரம் அடைந்தது.
 
அப்போது திடீரென கிருஷ்ணாவும் அவரது தம்பியான ரஞ்சித்தும் ராகேஷை கூர்மையான ஆயுதத்தால் கொடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த ராகேஷை அவரது மனைவி பூஜா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். 
 
தற்போது ராகேஷின் மனைவி பூஜா அளித்த புகாரை ஏற்று கிருஷ்ணா மற்றும் அவரது தம்பி ரஞ்சித்தையும் டெல்லி கிழக்கு போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.