செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (19:08 IST)

அசைவ உணவுகளின் விளம்பரங்களுக்கு தடையா? உயர் நீதிமன்றத்தில் வழக்கு

nonveg
அசைவ  உணவுகளின் விளம்பரங்களுக்கு தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. 
 
இந்தியாவில் பெரும்பான்மையான அசைவ பிரியர்கள் உள்ளனர் என்பதும் அவர்களை கவர்வதற்காக அசைவ உணவுகள் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் அசைவ உணவகங்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜெயின் அமைப்பினர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர் 
 
அசைவ உணவுகளை சாப்பிடுமாறு இணையதளத்தில் வரும் விளம்பரங்கள் மனநிலையை பாதிக்கும் என்றும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மன உணர்வுகளை புண்படுத்துகிறது என்றும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.