வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:02 IST)

அடக்கமான ஆதார் வேண்டுமா? இதோ இருக்கு Aadhaar PVC card !!

பிவிசி அட்டையில் ஆதார் அட்டையை அச்சிட்டு பர்சில் வைக்கும்படியான வடிவத்தில் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், ஆதார் கார்ட்டை  PVC Card போன்று அச்சிட்டுக்கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. இதனை எவ்வாறு பெறுவது என தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
1. முதலில் UIDAI வலைத்தளமான https://uidai.gov.in/ க்கு செல்ல வேண்டும்.
2. இங்கே, My Aadhaar பகுதிக்குச் சென்று, 'Order Aadhaar PVC Card’ என்பதைக் கிளிக் செய்ய வெண்டும்.
3. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும்
4. பாதுகாப்பு குறியீடு, கேப்ட்சாவை நிரப்பிய பிறகு, OTP-ஐ கிளிக் செய்க
5. OTP-ஐ பதிவிட்டதும் ஆதார் பிவிசி அட்டை முன்னோட்டம் காணப்படும்.
6. இதற்குப் பிறகு, பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து, ரூ .50 கட்டணம் செலுத்தவும்.
8. கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் வந்து சேரும்.