வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 மே 2022 (10:51 IST)

சீரியல் நடிகை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை! – காஷ்மீரில் பரபரப்பு!

Amreen Bhatt
காஷ்மீரில் டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டத்தில் உள்ள ஹஷ்ரூ சதுரா என்ற பகுதியில் உள்ள வீட்டில் அம்ரீன் பட் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் காஷ்மீரில் வெளியாகி வரும் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அம்ரீன் பட் வீட்டிற்கு திடீரென புகுந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் அம்ரீன் பட்டை சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தாக்குதலின்போது வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கும் காயம்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா கரும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அம்ரீன் பட் குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.