ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 டிசம்பர் 2018 (19:06 IST)

பத்தாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் : 5 மாணவர்கள் கைது...

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் பரசிணி என்ற பகுதியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண்ணின் தாயார் கண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதனைதொடர்ந்து மகளிர் போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மாணவி கூறியதாவது:
 
பேஸ்புக் மூலமாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுடைய அழைப்பின் பேரில் அவருடன் லாட்ஜுக்கு சென்றேன். அங்கு என்னை உடை மாற்றச் சொன்னார். நான் வேறு உடை மாற்றும் போது அந்த பெண் அறையின் கதவை அடைத்து விட்டு சென்று விட்டார்.
 
அதன் பிறகு 5 பேர் அறைக்குள் நுழைந்தனர். நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் அவர்கள் என்னை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டனர். அதை செல்போனிலும் படம் பிடித்துக் கொண்டனர். 
 
இதை வைத்துக்கொண்டு மேலும் 20 பேர் என்னை பலாத்காரம் செய்தனர். இந்தக் கொடூரத்தை யாரிடம் கூறுவது என்று தவித்தபோது  என் அண்ணனிடமே இந்த விவகாரத்தை கூறினேன். 
 
அந்த கும்பலிடம் என் அண்ணன் இதுபற்றி கேட்டபோது, அந்த கும்பல் அவரை கொலை செய்வதாக மிரட்டினார்கள். இவ்வாறு மாணவி போலீஸிடம் கூறி அழுதிருக்கிறாள்.
 
இதைகேட்ட போலீஸார் பலாத்காரத்தில் ஈடுபட்ட  19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து,
இதுவரை 5 பேரை கைது செய்திருக்கிறார்கள். இன்னும் குற்றவாளிகள் சிலரை கைதுசெய்ய போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.