உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் - தெலுங்கானா!
உக்ரைனில் இருந்து தெலுங்கானா திரும்பிய மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவசர அவசரமாக தாயகம் திரும்பினார்கள். இந்த நிலையில் மாணவர்களின் படிப்பில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து தெலுங்கானா திரும்பிய மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். சுமார் 700 மருத்துவ மாணவர்கள் தெலுங்கானாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டிருக்கிறார்.