வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (10:48 IST)

அமெரிக்க பாடப்புத்தகதில் இந்திய நபர்; காடு வளர்த்த தனிமரம்!

அசாமில் மரங்களை நட்டு வளர்த்து காட்டை உருவாக்கிய சாமானியரை குறித்த பாடம் அமெரிக்க பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அசாமில் கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் மரங்களை நட்டு காட்டை உருவாக்கிய இயற்கை ஆர்வலர் ஜாதவ் மொலாய் பாயெங். காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து கடந்த 1979ம் ஆண்டு முதலாக அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை பகுதியில் பல மரங்களை நட்டு வளர்த்த அவர் கடந்த பல ஆண்டுகளில் மொத்தமாக 550 ஹெக்டேர் அளவுக்கு அசாமில் காட்டை உருவாக்கியுள்ளார்.

இவர் குறித்து அவ்வபோது செய்திகள் வெளிவந்தாலும் அவருக்கு பெரும் கௌரவம் அளிக்கும் விதமாக அமெரிக்க பள்ளி பாடப்புத்தகத்தில் “Forest Man of India” என்ற தலைப்பில் ஜாதவ் பற்றிய பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.